நெப்போலியனின் கடைசிக்காலத்தில் செயின்ட் ஹெலனா தீவில் சிறை வைக்கப்பட்டு இருந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரைப் பார்த்து ஒரு செஸ் விளையாட்டு சாதனம் ஒன்றைக் கொடுத்தார். நெப்போலியன் அதனை வைத்துத் தனியாக விளையாடினார். 1821 – ல் நெப்போலியன் இறந்த பிறகு அது ஏலத்தில் விடப்பட்டது. அது பலர் கை மாறியது. ஒரு சமயம் தற்செயலாக அதிலிருந்த சிறு பொத்தானைத் திருகியபோது அது திறந்து கொண்டது. அதன் உள்ளே இருந்தது ஒரு வரைப்படம். செயின்ட் ஹெலனா தீவிலிருந்து தப்பிக்க வழிகாட்டப்பட்ட படம். அது நெப்போலியனுக்கு தெரியாமலே போய்விட்டது. ஆனால், அதை விலைகொடுத்து வாங்கியோர் அறிந்தனர். கையில் வைத்திருந்த நெப்போலியன் விளையாடமட்டுமே பயன்படுத்திய பொருள், சிறையிலிருந்து தப்பிக்க உதவவில்லை.
உலகத்துல நிறையபேர்கிட்ட பைபிள் இருக்கு. நம்ம கைலயும் பரிசுத்த வேதாகமம் இருக்கு. ஆனா பலபேருக்கு அது ஒரு விளையாட்டுப் பொருள் போல. சிலருக்கு ஒரு கௌரவமான ஆசீர்வாதப் புத்தகம். சிலருக்கு தைரியம் கொடுக்கும் தலையணை! ஆனா சிலருக்கு மட்டுமே “இந்த பாவ உலகத்தில இருந்து தப்பிச்சு பரலோகம் போக வழி காமிக்கும் ஒப்பற்ற வழிகாட்டி” அந்த வழிகாட்டி இயேசுதான்னு நல்லாப் படிச்ச கல்விமான்களுக்குத் தெரியறது இல்ல குழந்தையைப் போல உள்ளம் உள்ள எல்லாருக்கும் தெரியுது ஞானிகளுக்கு அல்ல பைத்தியம் போன்ற நமக்குப் புரியுது. அந்த “பைபிள் உள்ள மறைவா உள்ள காரியம் இயேசு” “வெளிப்படையா உள்ள காரியமும் இயேசு” நிறைய பேர் ஆசீர்வாதங்களைப் பார்த்து இயேசுவை விட்டு விடறாங்க. அப்புறம் அந்த பாவங்கற ஜெயிலவிட்டு தப்பிக்கறது எப்படி?