வேதத்தில் உள்ள மொத்த அதிகாரங்கள் — 1189.

பழைய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 929.

புதிய வேதாகமத்தில் உள்ள அதிகாரங்கள் — 260.

அதிக வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 119.

குறைவான வசனங்கள் உள்ள அதிகாரம் — சங்கீதம் 117.

மத்திய அதிகாரம் – அதாவது மேலே கூறப்பட்டுள்ள 117 மற்றும் 119 க்கு நடுவில் உள்ள — சங்கீதம் 118.

சங்கீதம் 118 க்கு முன்புள்ள அதிகாரங்கள் — 594 .

சங்கீதம் 118 க்கு பின்புள்ள அதிகாரங்கள்– 594 .

மொத்த அதிகாரங்கள் -1188

(594+594)+1(மத்திய அதிகாரம்)=1189.

மத்திய வசனம் — சங்கீதம் 118:8.

சங்கீதம் 118:8 — கர்த்தர் மேல் பற்றுதலாய் இருப்பதே நலம்.

சிறிய வசனம் யோவான் 11:35 இயேசு கண்ணீர் விட்டார்.

பெரிய வசனம் (தமிழில்)– தானியேல் 5:23.

வேதாகமத்தின் கடைசி வார்த்தை “ஆமென்”

வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டது – எபிரேயம், அரமிக், கோய்னிக் கிரேக்க மொழி

வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன – இந்த எண்ணில் ஒன்றை கூட்டினால் 666 ஆகிவிடும்.

இப்புத்தகங்கள் எழுதப்பட்ட வருடங்கள் சுமார் 1500

கி.மு விலிருந்து 100 கி.பி வரை. (மொத்தம் 1600 வருடங்கள்)
.
வேதாகமம் சுமார் 40 நபர்களால் எழுதப்பட்டது. இதில் பலர் மற்றவர்களை பார்த்ததோ, அவர்களை பற்றி கேள்விப்பட்டதோ கிடையாது.

பலர் மற்றவர்கள் எழுதினதை படித்தது கூட கிடையாது.

இவர்கள் உலகின் பல பகுதிகளில் பிறந்தவர்கள். மூன்று மொழிகளில் எழுதப்பட்டது.

இவர்களில் படிக்காதவர்கள் (மீனவர்கள், ஆடு மேய்ப்பவர்கள்)

முதல் படித்த ஞானி (சாலமன்) வரை எழுதியுள்ளனர்.

உலகின் பல சட்டங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை.

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள 3000 -க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன.

இன்னும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் நிறைவேற உள்ளன.

உலகிலேயே அதிகமாக ஆராய்ச்சி செய்யப்படும் புத்தகம் வேதாகமம்.

உலகிலேயே அதிகமாக படிக்கப்படும் புத்தகமும் வேதாகமம்.

ஆங்கில வேதாகமத்தில் 3000 – க்கும் மேல் “கர்த்தர் சொன்னதாவது” என்று பொருள்பட எழுதப்பட்டுள்ளது.

அதிக புத்தகங்கள் பரிசுத்த பவுல் (மொத்தம் 13 புத்தகங்கள்) புதிய ஏற்பாட்டில் எழுதியுள்ளார்.

பழைய ஏற்பாட்டில் முதல் ஆகமங்களை மோசே எழுதினார்.

சமீபத்தில் ஒரு விஞ்ஞானி ஒரு மனிதன் தன்னிடம் காண்பிக்கப்பட்ட எந்த ஒரு பட்டியலிலும் ஏழு காரியங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்.

மற்றொரு விஞ்ஞானி ‘அதனால்தான், ஏழு என்கிற காரியம் நாம் இருக்கிற இந்த உலகில் அடிக்கடி காணப்படுகிறது.

உதாரணமாக, ஏழு உலக அதிசயங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு கடல்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு, வாரத்தில் நாட்கள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு.’ என்று கூறினார். அது சரியென்றாலும், வேதத்தில் ஏழு என்கிற எண் மிகவும் விசேஷித்தாய் இருக்கிறது. அதை குறித்து ஆராய்ந்தால் மிகவும் அற்புதமான ஒரு எண்ணாக இந்த ஏழு (7) திகழ்கிறது.

இந்த எண் வேறு எந்த எண்களைக் காட்டிலும் அதிகமான முறை உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏழு என்ற எண்ணும், அதின் பெருக்கு தொகையான எண்களுமே அதிகமாக வேதத்தில் காணப்படுகிறது.

ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும்.

தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்து அந்த நாளை பரிசுத்தப்படுத்தினார்.

ஆபிரகாமுக்கு ஏழு ஆசீர்வாதங்கள் ஆதியாகமம் 12:2-3-ல் கூறப்படுகிறது.

பிரதான ஆசாரியன் ஏழு முறை பலியின் இரத்தத்தையும், அபிஷேக எண்ணெயையும் கர்த்தருக்கு முன்பாக கிருபாசனத்தின் மேல் தெளிக்க வேண்டும்.

யோசுவா எரிகோவை சுற்றி வந்தபோது, ஏழு ஆசாரியர்கள், உடன்படிக்கை பெட்டியை சுமந்தபடி, ஏழு எக்காளங்களை முழக்கி, ஏழாவது நாள், ஏழு தடவை சுற்றி வந்து ஜெயத்தை சுதந்தரித்தார்கள்.

வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும், ஏழு பொன்குத்து விளக்குகள்,

ஏழு நட்சத்திரங்கள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு கண்கள், ஏழு ஆவிகள், ஏழு கோபகலசங்கள், ஏழு இடிமுழக்கங்கள், என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சங்கீதங்களில் 126 சங்கீதங்கள் தலைப்புகளோடு உள்ளன. (7×18) அவைகளில் ஏழு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தாவீது (56 சங்கீதங்கள் எழுதப்பட்டுள்ளன)
2. கோராகின் புத்திரர் (11)
3. ஆசாப் (12)
4. ஏமான் (1) (சங்கீதம் 88)
5. ஏத்தான் (1) (சங்கீதம் 89)
6. மோசே (1) (சங்கீதம் 90)
7. சாலமோன் (1) (சங்கீதம் 72)

புதிய ஏற்பாட்டில் ஏழு சங்கீதங்களின் வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கீதம் 69 -ன் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஏழு தடவை வருகின்றன.

யோவான் சுவிசேஷத்தில் ஏழு அற்புதங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

மத்தேயு சுவிசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றது.

இன்னும் எத்தனையோ வசனங்கள் ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்த முறை நாம் வேதம் வாசிக்கும்போது, ஏழு என்ற எண் வரும்போது நிறுத்தி, தேவன் இந்த இடத்தில் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார்? என்று யோசித்து, அவருடைய ஞானத்திற்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஞானம் அளவற்றது. அவருடைய வார்த்தைகளில்தான் எத்தனை பொருள்கள் அடங்கியிருக்கின்றன!

இந்த அற்புத தேவனை தெய்வமாக கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியவான்கள்! ஆமென் அல்லேலூயா!

முழு வேதாகமத்தையும் சத்தமாக தெளிவாக வாசிக்க சுமார் 70 மணி நேரம் ஆகும்

வேதத்தில் உள்ள அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட வருடம் 1227 A.D

உலகத்திலயே அதிகமாக விற்பது பரிசுத்த வேதாகமமே.

ஒரு நிமிடத்திருக்கு சுமார் 58 வேதாகமங்கள் கொடுக்கப்படுகிறது. (நீங்கள் இதை வாசிப்பதற்குள்ளாக நூற்றுக்கணக்கான வேதாகமங்கள் பரிமாறியிருக்கும்)

சுமார் 2000 (கிறிஸ்துவுக்கு பின்) வருடங்களாக பலர் வேதாமத்தை அழித்துவிட வேண்டும் என்று அதை எரித்தனர், கிழித்தனர், வேதாகமத்தை தடுத்தனர்.

ஆனால் 1200 க்கும் மேற்பட்ட மொழிகளில் அச்சடிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஒரு நாளிற்கு சுமார் 168,000 வேதாகமங்கள் கொடுக்கப்படுகிறது.

இன்னும் பல உண்மைகள், வேதாகமத்தின் அதிசயங்கள் எண்ணில் அடங்காதவைகள்.

இறுதியாக… உலகில் பல புத்தகங்கள் அறிவை கொடுக்கும், பல சந்தோசத்தை கொடுக்கும்.

ஆனால் பரிசுத்த வேதாகமம் ஒன்று தான் அறிவு, சந்தோசத்தோடு சமாதானத்தையும் இருதய மாற்றத்தையும் கொடுக்கும்.

அது இயேசுவை, அவர் அன்பை காட்டும், இரட்சிப்பை கொடுக்கும், பரலோக ராஜ்ஜியம் சேர்க்கும்.

இப்பொழுது உங்கள் வேதாகமத்தை எடுத்து படியுங்கள். அது வெறும் காகிதமல்ல…..
பரிசுத்த தேவனின் வார்த்தைகளை தாங்கி நிற்கும் உயிருள்ள இதயத்துடிப்புக்கள்.

Leave a Comment