பிரியமானவர்களே, ஆசீர்வாதமாக வாழ, சுகமுடன் வாழ, ஐசுவரியமாய் வாழ, பிரச்சனையின்றி வாழ்வதற்காக மாத்திரம் யாரும் மதம் மாறாதீர்கள். இந்த உலகத்திலே கிடைக்கும் நன்மைகளுக்காக மாத்திரம் யாரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஏனெனில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறாதவர்களும் ஆசீர்வாதமாக, ஐசுவரியமாக, சுகமாக, எந்த பிரச்சனையும் இல்லாமல்தான் வாழ்கிறார்கள். பைபிளில் கூட “இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரம் நாம் இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதாபத்திற்கு உரியவர்கள்” (1 கொரி 15:19) என்றுதான் எழுதப்பட்டுள்ளது. ஒரு முக்கியமான உண்மையை சொல்லுகிறோம். மரணம் என்பது மனிதனுடைய வாழ்வின் முடிவு அல்ல, அதுதான் முடிவே இல்லாத வாழ்க்கையின் ஆரம்பம். ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது…
Read More